Indian Express Tamil
ரயில்வேயின் புதிய வசதி... இனி பார்சல் அனுப்ப நீங்க எங்கும் அலைய வேண்டாம்; வீட்டுக்கே வருவாங்க
எழுதியவர்: அனிஷ் மொண்டல் இந்திய ரயில்வே, பார்சல்களை அனுப்புவதை எளிதாக்கும் வகையில், வீடு தேடி வந்து பார்சல்களைப் பெற்றுக்கொண்டு, உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ரயில் பார்சல் செயலி – வீட்டிலிருந்து வீட்டுக்கு’ என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையதளங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரயில்வே அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலும், நீண்ட நடைமுறைகள் மற்றும் ஆவணப் பணிகளை மேற்கொள்ளாமலும் இணையவழியில் பார்சல் சேவையை முன்பதிவு செய்து, மின்னணு முறையில் பணம் செலுத்த…