Indian Express Tamil
வரலாற்றிலேயே 7-வது பெரிய ஓட்டை: அண்டார்டிகா ஓசோன் படலத்துக்கு என்ன ஆச்சு?
பூமியை சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் 'ஓசோன் படலத்தில்' ஏற்பட்டுள்ள ஓட்டை, இந்த ஆண்டு மீண்டும் பெரிதாகியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் தேசியக் கடல் மற்றும் வளிமண்டல (NOAA) அமைப்புகளின் ஆய்வறிக்கையின்படி, 48 ஆண்டுகால கண்காணிப்பு வரலாற்றிலேயே இது 7-வது மிகப்பெரிய ஓசோன் ஓட்டையாகப் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் 4 அன்று வெளியிடப்பட்ட அளவீடுகளின்படி, செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 13 வரையிலான காலகட்டத்தில் இந்த ஓசோன் ஓட்டை சராசரியாக 2.5 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருந்தது. குறிப்பாக, செப்டம்பர் 18 அன்…