Nakkheeran
மணல் அள்ளியதில் முறைகேடு; தவெக பிரமுகர் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன், திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், கறம்பக்குடி குளந்திரான்பட்டு கரிகாலன் ஆகியோர் கொண்ட டீம் கடந்த காலங்களில் தமிழ்நாடு முழுவதும் மணல் அள்ள ஒப்பந்தம் எடுத்து ஆறுகளை தரிசாக்கிவிட்டனர். இது சம்மந்தமாக பல முறை ஐ.டி, இ.டி சோதனைகளும், லஞ்ச ஒழிப்பு சோதனைகளும் நடத்தப்பட்டது. ஆனாலும் ஆட்சியாளர்களுடன் உள்ள நெருக்கம் குறையவில்லை. தற்போதைய ஆட்சியாளர்களிடமும் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதனால் மீண்டும் மணல் அள்ளும் ஒப்பந்தம் அவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் ஆறுகளில் மணல் அள்ளியதில் பல ஆயிரம் கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாக தம…