உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரியார் நூலகத்தில் மோசடி; 'அத்தனை நூல்களையும் உடனடியாக எரிக்கணும்': எழுத்தாளர் ஜெயமோகன் வலியுறுத்தல்

எழுத்தாளர் ஜெயமோகன் தனது முழுமையறிவு முகநூல் பக்கத்தில், "கோவை பெரியார் நூலகம் எப்படிப்பட்ட மோசடியை நிகழ்த்தியுள்ளது என்று பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை காட்டுகிறது. பல கோடி ரூபாய்க்கு நூல்களை வாங்கி அடுக்கியுள்ளனர். அத்தனையும் ஏ.ஐ வைத்து உருவாக்கப்பட்ட போலிநூல்கள். முழுக்கமுழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல. அத்தனைவரியும், அத்தனை செய்திகளும் பிழைகள். தமிழகத்தின் முதல்வராகக்கூட கற்பனைபெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஏ.ஐ செயலிகள் உருவாக்கியவை இவை. (இன்று ஏ.ஐ.செயலி இந்த அளவுக்கு பொய்ச்செய்திகளைச் சொல்வதில்லை) ஏ. ஐ 'ஹலூசினேட்' செய்த தகவல்கள். முற்றிலும் பிழையான மொழ…