உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மீண்டும் களமிறங்கும் சிஜேபி’; தீபாவளிக்கு முந்தைய நாளே தொடங்கும் போராட்டம்!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சிஜேபியும் (கரப்பான் பூச்சி மக்கள் கட்சி) கடந்த மாதம் முதல் மஹராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் டெல்லி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் நெருக்கடிகளுக்குக்கிடையே நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களின் போது சிஜேபியின் முக்கிய தலைவர்களான அபிஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். எ…