உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஊட்டி மலை மண் சரிவில் அரசு பேருந்து சிக்கியது எப்படி ? நள்ளிரவில் நிகழ்ந்தது என்ன ?

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9;30 மணிக்கு 7 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று கோவைக்கு புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் ஜனகராஜ் இயக்கினார். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பேருந்து குன்னூரை கடந்து காட்டேரி பார்க் கடந்து வரும் போது பேருந்தின் பின் பக்க டயர் பஞ்சரானதால் பயணிகளை அந்த வழியாக வந்த வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பின்னர் ஓட்டுனர் ஜனகராஜும், நடத்துனர் கேசவனும் சேர்ந்து பேருந்தின் டயரை கழட்டி மாற்றி மீண்டும் கோவையை நோக்கி புறப்பட்டனர். கனமழைக்கிடையே பேருந்தை மிதமான வேகத்தில் இயக்கிச் சென்றனர். இரவு 11 மணி அளவில் பர்லியார் பகுதியில் பேருந்தை நிறுத்தி தேனீர் அர…