உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இன்று முதல் போலந்திலிருந்து இலங்கைக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை விமான சேவை

ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போலந்திலிருந்து இலங்கைக்கான குளிர்கால சுற்றுலா விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, போலந்தின் மூன்று முக்கிய நகரங்களிலிருந்து என்டர் எயார் (Enter Air) விமான சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் தமது முதலாவது பயணத்தை ஆரம்பித்து, 550 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (06) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இதன்படி, இன்று காலை 6.51 மணிக்கு போலந்தின் கட்டோவிஸ் (Katowice) நகரிலிருந்து ENT-7607 என்ற விமான...