உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஓ.பி.சி கிரீமி லேயர் தீர்ப்பு: அமல்படுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் கேட்ட மத்திய அரசு; உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி) கிரீமி லேயர் தகுதியை, பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது என்று கடந்த மார்ச் 11-ம் தேதி வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிசெய்துள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை எதிர்காலத்திற்கு மட்டுமே பொருந்துமாறு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது. இதற்கான அமலாக்கத்தைத் தள்ளிப்போடுவத…