உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிரிட்ஜ் துர்நாற்றம் முதல் சமையலறை எண்ணெய் பிசுக்கு வரை... ஆரஞ்சு தோல் செய்யும் மேஜிக்!

பொதுவாக ஆரஞ்சு பழத்தைச் சாப்பிட்டவுடன் அதன் தோலைக் குப்பையில் தூக்கி எறிவதுதான் பலருடைய வழக்கம். ஆனால், நாம் தேவையற்றது என்று நினைத்துத் தூக்கி எறியும் ஆரஞ்சு பழத்தோலில் வீட்டைச் சுத்தம் செய்வது முதல் துர்நாற்றத்தைப் போக்குவது வரை பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு மாற்றாக ஆரஞ்சு பழத்தோலைப் பயன்படுத்தலாம் என்று வீட்டு பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த செலவில், இயற்கையான முறையில் வீட்டைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு இந்த எளிய குறிப்புகள் உதவியாக இருக்கும். ஆரஞ்சு பழத்தோலில் இயற்கையாகவே சிட்ரஸ் எண்ணெய்கள் காணப்படுகின்றன. குறிப்பாக…