IBC Tamil
எரிபொருள் தட்டுப்பாட்டால் சிக்கலில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!
இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) பாரிய நிதியியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. உலகளாவிய ரீதியில் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்களால் ஏற்பட்டுள்ள நிதியியல் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்க நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.