Daily Thanthi
நுரையீரல் நலனுக்கு உதவும் பலூன் ஊதும் பயிற்சி!
கொண்டாட்டங்கள், விழாக்களில் தவறாமல் இடம்பெறும் பலூன், விளையாட்டுப் பொருளாக மட்டுமின்றி சுவாசப் பயிற்சிக்கும் பயன்படுகிறது. பலூனை ஊதும்போது காற்றை வெளியேற்றுவதற்கான முயற்சி தேவைப்படுவதால், இது சுவாசப் பயிற்சியின் ஒரு வடிவமாக அமைகிறது. நுரையீரல் செயல்பாட்டில் உதரவிதானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள தசையாகும். பலூனை ஊதும்போது காற்றை அழுத்தத்துடன் வெளியேற்ற வேண்டியிருப்பதால்…