Polimer News
சிறுமி மாயமான விவகாரம்.. அமாவாசை கொள்ளையர்களை நெருங்குகிறாதா சிபிசிஐடி..?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹேமலதா என்ற 7 வயது சிறுமி மாயமாகி 13 நாட்களை கடந்தும் போலீசாரால் கண்டுபிடிக்க இயலாது நிலை நீடித்து வருகின்றது. பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கள் மகளை காணவில்லை என்று தாய் தந்தையும், நள்ளிரவில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டு பெண்ணும் தெரிவித்த நிலையில் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சிறுமி ஹேமலதாவின் வீடு, அவர் படித்த பள்ளி, வீட்டின் பின்புறம் உள்ள முல்தோப்பு மற்றும் வயல்வெளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா தலை…