உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ஆட்சியை இழந்த நெதன்யாகு’; இஸ்ரேலின் புதிய பிரதமராக ஐசன்கோட் பதவியேற்பு?

இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்தைத் (தேர்தல் முடிவுகள்) தொடர்ந்து புதிய பிரதமர் பதவியேற்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இஸ்ரேலில், கடந்த அக்டோபர் மாதம் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்தலில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், எந்த அணி ஆட்சியமைக்கும்? என்ற இழுபறி நிலை நீடித்து வந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரையில், பிரதமர் நெதன்யாகுவின் அணி 53 இடங்களை வென்றுள்ளது. எதிரணியான ஐசன் கோட்டின் அணி, 48 இடங்களை வென்றுள்ளது. இதனிடையே, அரபு கட்சிகளின் கூட்டணி 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்…