உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மரத்தை வெட்டியதற்கு இத்தனை லட்சம் அபராதமா?’; அரசின் அதிரடி நடவடிக்கை

தனது சொந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டியதால், சம்பந்தப்பட்ட நபருக்கு அரசு நிர்வாகம் பல லட்சங்கள் அபராதம் விதித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் தனது இடத்தை சுத்தம் செய்வதற்காக வனத்துறை மற்றும் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியுள்ளார். அதன்படி, உரிய அனுமதியின்றி 110 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களில் 25 மரங்கள் நன்கு வளர்ந்த பெரிய மரங்கள். இருப்பினும், மீதமுள்ள பெரும்பாலான மரங்கள் சிறிய வகை மரங்களாகும். எனினும், இந்த மரங்களை வெட்டியதற்காக, அந்த நபருக்குச் சிம்லா மாநகராட்சி ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சிம்லா மாந…