உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்” - ப. சிதம்பரம் எம்.பி. கருத்து!

கைது நடவடிக்கை தொடர்பான விவகாரத்தில், கைது செய்வதற்கு முன்பாக ஒருவரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் நேரம் 24 மணி நேரக் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று (05.11.2026) தீர்ப்பு வழங்கியது. அதில், “காவல்துறையினர் ஒருவரைத் தடுத்து வைத்த நேரத்திலிருந்தே 24 மணி நேரக் காலக்கெடு கணக்கிடப்பட வேண்டும். அதிகாரப்பூர்வமாகக் கைது செய்த நேரத்திலிருந்து கணக்கிடக் கூடாது. மேலும், தடுத்து வைக்கப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன…