Nakkheeran
'இதுவரை மொத்தம் 4,774 கிலோ...' போ@தை ஒழிப்பில் தாம்பரம் மாநகர காவல்துறை
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில், காவல்துறையினர் பல்வேறு கடுமையான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் முக்கியப் பகுதியாக, பல்வேறு குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முறைப்படி அழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜின் நேரடி உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 'ஜி.ஜே. மல்டிகிலேவ்' நிறுவனத்தின் நவீன எரிப்பு நிலையத்தில், 06.11.2026…