உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'பொதுமக்களின் கொந்தளிப்பு ஜாமீனை தீர்மானிக்காது'-விவாதத்தை எழுப்பும் நீதிமன்றத்தின் கருத்து

கேரள மாநிலம் கொச்சி அருகே கடந்த மாதம் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த விபத்து, ஒட்டுமொத்த கேரளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விபத்து நடந்த விதம் மற்றும் அதன் பின்னணி காரணமாக இந்த வழக்கு சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய விவாதத்தையும் கடுமையான எதிர்ப்புகளையும் கிளப்பியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் ஜாமீன் வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து தான் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 11 அன்று அதிகாலை நேரத்தில் நெடும்பாசேரி பகுதியில் அதிவேகமாகப் பறந்து வந்த சொகுசு கார், இருசக்கர வ…