Polimer News
ஆந்திர முன்னாள் பெண் அமைச்சருடன் பெண் காவல் அதிகாரி தள்ளுமுள்ளு..!
ஆந்திர மாநிலம் சிலகலூரிபேட்டையில், முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் மூத்த தலைவருமான விததலா ரஜினியை அவரது வீட்டு வாசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளிய காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தன்னைச் சந்திக்க தனது வீட்டுக்கு வந்த கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளரை உள்ளே விடாமல் தடுத்த போலீசாரிடம் அது குறிக்க கேட்க வெளியே வந்த விததலா ரஜினியை பெண் போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.