உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2-வது சிறப்பு டெட் தேர்வு: புதுச்சேரி ஆசிரியர்களும் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2-வது கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்‌துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக, இந்த 2-வது கட்ட சிறப்பு டெட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வெளியானது. இந்நிபந்தனைகளுடன் புதுச்சேரி யூனியன் ப…