Nakkheeran
“60 லிட்டர் சாரா*யம்; 300 லிட்டர் ஊ*றல் அழிப்பு” - போலீசார் அதிரடி!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி கிராமத்தில் தொடர்ந்து ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னி்ட்டு சாராயம் ஊறல்கள் அதிகமாக போடப்பட்டுள்ளதாவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் சுமார் 20 போலிசார் இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை கரு கீழத்தெரு, தெற்குத்தெரு கிராமத்தில் வயல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளக்கரை புதருக்குள்ளிருந்து சிலர் தப்பி ஓடிய…