உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போக்சோ சட்டம் பழிவாங்கும் ஆயுதமாக மாறுகிறதா? நீதிமன்றங்களை அதிரவைத்த போலி வழக்குகள்-விளக்கும் வழக்கறிஞர் பாலு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கடுமையான பிரிவுகளையும் உடனடியாகக் கைது செய்யக்கூடிய அதிகாரங்களையும் கொண்டது. ஆனால், காலப்போக்கில் தனிப்பட்ட விரோதங்கள், சொத்துத் தகராறுகள் மற்றும் குடும்பப் பகைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது. சட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில், குழந்தைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தித் தொடரப்படும் போலி வழக்குகளின் ஆபத்துகள் குறித்து நீதிமன்றங்களில் பெரும் விவாதங்கள…