Indian Express Tamil
சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்: சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புகழ்பெற்ற மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழாக்கள் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வரத் தொடங்குவார்கள். இந்த புனித பயணத்தின் போது அய்யப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை 4 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி 20…