உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ. 1 கோடியில் இராவணனின் சிம்மாசனம், ரூ. 1.5 கோடியில் சூர்ப்பநகையின் தேர்: ராமாயணம் பட கலை இயக்குநர் தகவல்

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம் பாகம் 1' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, திரைப்பட வசூல் கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி ரூ.127.50 கோடி வசூலித்துள்ளது. இந்த ராமாயணம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மொத்த தயாரிப்புச் செலவு ரூ.4,000 கோடிக்கும் அதிகம் என்று தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, யூடியூபர் பிரகர் குப்தாவுடனான நேர்காணல் ஒன்றில் முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் கலை இயக்குநர்களில் ஒருவரான ரமேஷ் அந்தாலே, இராவணனின் சிம்மாசனம் ரூ.1 கோடி செலவிலும், சூர்ப்பநகையின் தேர் ரூ.1.5 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பிரபாத் க…