Nakkheeran
அமைச்சர் ராஜ் மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான் அகல்விளக்கு பதிப்பகத்தைக் கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும் போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த பதிப்பகத்தில் உள்ள பல நூல்களில…