Nakkheeran
மாவட்ட எஸ்.பி. உட்பட 4 பேர் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசின் உள்துறையானது, ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பணி நியமனங்களை அறிவித்து இன்று (06.11.2026) அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, காத்திருப்புப் பட்டியலில் இருந்த டி.என். ஹரிகிரண் பிரசாத், இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த ஜி. சண்டீஷ், சென்னை பெருநகரக் காவல் துறையின் தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பெருநகரக் காவல் துறையின் தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக இருந்த கே. முத்துக்குமார், ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகப் பணி…