Indian Express Tamil
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு ஆதிக்கம்: பெண் தொழிலாளர்களின் பங்களிப்பில் சாதனை
எழுதியவர்: சித்தார்த் உபாசனி 2024-25 நிதியாண்டில், பெண் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு (ஏ.எஸ்.ஐ) முடிவுகளின்படி, இந்தியாவில் கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் (Optical) பொருட்கள் தயாரிப்புத் துறையில் நேரடியாகப் பணியாற்றும் மொத்த பெண் தொழிலாளர்களில் 44.4% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது 2023-24 நிதியாண்டில் 42.9% ஆக இருந்தது. ஆங்கிலத்தில் படிக்க: அதேபோல், மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் நேரடியாகப் பணியாற்றும் ப…