Indian Express Tamil
'இதற்கு நானே பொறுப்பு'; வருத்தம் தெரிவித்த தனுஷ்: சென்னையில் ரசிகர்கள் முன்பு பரபரப்பு பேச்சு
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பங்கேற்க வந்த ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்காமல் போனது குறித்து தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தனுஷ். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கர திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அமரன் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கததில் ஓம் என்ற படத்தில் தனுஷ் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷூடன…