Indian Express Tamil
தனுஷ் விழாவில் விஜய் பெயருக்கு எழுந்த ஆரவாரம்: பேச முடியாமல் நிறுத்திய சாய் பல்லவி
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி, முதல்வர் விஜய் பெயரை சொன்னவுடன், அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூட்டம் ஆராவாரம் செய்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தனுஷ். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கர திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அமரன் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கததில் ஓம் என்ற படத்தில் தனுஷ் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பண…