Daily Thanthi
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (NMMS) கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 (ஆண்டுக்கு ரூ.12,000) கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்…