Nakkheeran
“மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்” - முதல்வர் விஜய் வாழ்த்து!
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!. இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் தி…