Nakkheeran
'தி பைலட் பிக்காசோ'-கேமிங் பிரியர்களுக்கு விமானி கொடுத்த வேற லெவல் ட்ரிப்!
உலகமே கடந்த 11 வருடங்களாக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் ஒரு லெஜண்டரி வீடியோ கேம் வெளியாகப் போவதைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்க விமானி ஒருவர் செய்த வேலைதான் இப்போது இணையத்தில் செம வைரல். ஆன்லைனில் இவரை 'தி பைலட் பிக்காசோ' என்று செல்லமாக அழைக்கிறார்கள். காரணம் தனது செஸ்னா ரக விமானத்தையே தூரிகையாக மாற்றி வானத்தில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்து காட்டியுள்ளார். நவம்பர் 6 அன்று இந்தச் சம்பவம் உலக அளவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெஞ்சமின் மெக்டேனியல் இந்த பிரம்மாண்ட வரைபடத்தை வரைவதற்காக அர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பெண்டன்வில் விமான ஓடுதளத்தில் இருந்து காலை 11:29 மணிக்குத் தனது விமானத்தில் புறப்…