Polimer News
1,376 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி நிதி..!
சேலத்தில் ஆயிரத்து 376 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 150 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி நிதி உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனிக்கிழமை பிற்பகல் வரையிலான நிலவரப்படி, தீபாவளிக்கு 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, நான்கரை லட்சம் பேர் பயணித்திருப்பதாக கூறினார். பண்டிகை முடிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு திரும்பவும் பேருந்துகள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.