உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எழுத்தாளர்கள் கடும் கண்டனம்: கோவை பெரியார் அறிவுலகத்தில் 'அகல் விளக்கு', 'பீனிக்ஸ்' பதிப்பக புத்தகங்கள் அகற்றம்

கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் கோலாகலமாகத் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம்பெற்றிருந்த சில புத்தகங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தப் புத்தகங்கள் தற்போது நூலகத்திலிருந்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன. பெரியார் அறிவுலக நூலகத்தில் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 'அகல்விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' ஆகிய பதிப்பகங்களின் பெயரிலான புத்தகங்கள் போலியானவை என்றும், அவற்றில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பதிவுகள் மற்றும் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என்றும் பல்வேறு பிரபல எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், குறிப்பிட்ட அந்த பதிப்பகங…