உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சாப்பாட்டில் முடி, காசையும் வாங்கிய கர்நாடக உணவகம்: வாடிக்கையாளருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எழுதியவர்: Ashish Shaji கர்நாடகாவில் உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவில் முடி இருந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும், அதுகுறித்து ஊழியர்களிடம் தெரிவித்த பிறகு அசுத்தமான உணவிற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு வாடிக்கையாளர் வற்புறுத்தப்பட்டார். இதையடுத்து, அந்த வாடிக்கையாளருக்கு ரூ.8,000 வழங்குமாறு சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கிருஷ்ணன் K மற்றும் உறுப்பினர் பீனா K G ஆகியோர், இழப்பீடாக ரூ.5,000 மற்றும் வழக்குச் செலவுத் தொகையாக ரூ.3,000 என மொத்தம் ரூ.8,000 தொகையை வாடிக்கையாளருக்கு வழங்குமாறு உணவகத்திற்கு உத்தரவிட்டனர். "புகா…