Nakkheeran
“கால அவகாசம் கொடுங்கள்” - சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!
தேனி கிளைச் சிறையில் நேற்று (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாரா காவலர் ஸ்டாலின் பிரபு, கைதியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்த கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களைப் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடமிருந்த சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து…