Indian Express Tamil
“என் மகன் திருமணம்.. நான் ஏன் முடிவு செய்யக்கூடாது?” – கண்ணன் ரவி கொடுத்த அதிரடி பதில்
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது மகனின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த கண்ணன் ரவி, ஒவ்வொரு மதத்தினரும் தங்களது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப திருமணங்களை நடத்துகின்றனர். முஸ்லிம்கள் மசூதியிலும், கிறிஸ்தவர்கள் தேவாலயத்திலும் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல், நான் ஓர் இந்து என்பதால் இந்து முறைப்படி திருமணம் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனது மகனின் திருமணம் எப்படி நடைப…