உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பட்டுப் புடவை கட்டிட்டு பட்டாசு வெடிக்கப் போறீங்களா? பெண்களே... இந்த 5 பாதுகாப்பு விஷயங்களை மறந்துடாதீங்க

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் என வீடு முழுவதும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். குறிப்பாகப் பெண்கள் புத்தம் புதிய பட்டுப் புடவை, சுடிதார் எனப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதை விரும்புவார்கள். ஆனால், புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்கும்போது சிறிய கவனக்குறைவு கூட எதிர்பாராத தீ விபத்துகளுக்கும், கடுமையான தீக்காயங்களுக்கும் வழிவகுத்துவிடலாம். எனவே, இந்தத் தீபாவளிக்கு அழகான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், பாதுகாப்பான ஆடைகளை அணிவதிலும் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாகப் புடவை, துப்பட்டா, நீளமான ஆடைகள் அ…