Indian Express Tamil
தேடுதல் வேட்டை தீவிரம்; தேனி சிறையில் இருந்து தப்பிய 13 பேர் மீண்டும் கைது: 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு
தேக்கம்பட்டி சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பி ஓடிய 17 கைதிகளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தேனி மாவட்டம் தெக்கம்பட்டியில் உள்ள சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 விசாரணை கைதிகளில், 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சிறைக்கு பின்னால் இருந்த புதர்களில் கண்டறியப்பட்டார். மூவர் சாலை வழியாக நடந்து சென்றபோது பிடிபட்டனர். மற்றொருவர் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற முயன்றபோது கைது செய்ய…