உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’கேரளப் பேருந்து கர்நாடகத்தில் சிறைபிடிப்பு’; சர்ச்சைக்குரிய வாசகங்களால் காவல்துறை அதிரடி

கர்நாடக மாநிலம், சிக்கமகளூருவில் உள்ள ராமேஸ்வரா கோவில் அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்றில் இடம் பெற்றிருந்த படங்களும், வாசகங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த அந்த தனியார் பேருந்தில், ”தாவூத்; ரைஸ் ஆப் எ டான்” (தாவூத்: டானின் எழுச்சி) மற்றும் ”எம்பெரர்ஸ் ஸ்ட்ரைக்ஸ் அகைன்” (பேரரசர் மீண்டும் தாக்குகிறார்) போன்ற வாசகங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த வாசகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அந்த பேருந்தை மறித்து அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுப…