IBC Tamil
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: தெனியாய பகுதியில் நீரில் மூழ்கி மாயமான நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
மாத்தறை, தெனியாய பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினரும் காவல்துறையினரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள கெலேதொல எனும் இடத்திற்கு நீராடச் சென்ற நான்கு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர். ...