Indian Express Tamil
பெரியார் அறிவுலகம் சர்ச்சை எதிரொலி: பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் விடுவிப்பு - தமிழக அரசு உத்தரவு
கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் வெடித்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நிர்வாக அளவில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொது நூலகத் துறை இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ். அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய இயக்குநராக ஆர்.வி. ஷாஜீவனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ மையத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி எழுதியிருந்தார். இதையடுத்து, தரம் குறைந்த புத்தகங்கள் வாங்கியது மட்டுமன…