Nakkheeran
கரையும் காரைச்சல்லி தீவு- ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் உள்ள இயற்கை அரண்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காரைச்சல்லி தீவு, தற்போது கடுமையான கடல் அரிப்பினால் முற்றிலும் கடலுக்குள் மூழ்கும் அபாயகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டில் சுமார் 20.85 ஹெக்டராகப் பரந்து விரிந்து காணப்பட்ட காரைச்சல்லி தீவின் ஒட்டுமொத்தப் பரப்பளவு, கடல் அரிப்பின் கோரத்தாண்டவத்தால் 2025ஆம் ஆண்டில் வெறும் 3.14 ஹெக்டராகக் குன்றிப் போய் சுருங்கியுள்ளது. அதாவது, இத்தீவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 85 சதவீதத்திற்கும்…