Nakkheeran
தீபாவளி கொண்டாட்டம்; 600 டன் பட்டாசு கழிவுகள்?-சென்னையை தூய்மையாக்க ஏற்பாடு
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி முடித்த கையோடு, சென்னையின் சாலைகள் மற்றும் பொது இடங்களில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுக் கழிவுகளைப் போர்க்கால அடிப்படையில் அகற்றுவதற்கு அதிரடியான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 600 தூய்மைப் பணியாளர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நச்சுத்தன்மை வாய்ந்த பட்டாசுக் கழிவுகளை உடனுக்குடன் சேகரித்து, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்காக 350 சிறப்பு வாகனங்களும் தனியாக வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அன்றாட வீட்டு மக்கும் மற்றும் மக்காக் குப்பைகளுடன் இந்த நச்சு இரசாயனங்கள் நிறைந்த பட்டாச…