Indian Express Tamil
சண்டியர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திப்பு; சர்ச்சையில் திருமாவளவன்: பட்டியல் சமூகத்தினருக்கு பாதிப்பு என புகார்
கமல்ஹாசனின் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயர் சூட்டப்பட்டதற்குப் பட்டியலினத் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று கமல்ஹாசனைச் சந்தித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் 1992-ம் ஆண்டு தேவர்மகன் படம் வெளியானபோது தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நடந்ததாக பின்னாநாட்களில் இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றவர்கள் தேவர்மகன் படம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்…