Daily Thanthi
தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு
தேனி சமதர்மபுரம் அருகே மதுபோதை கும்பலால் நேற்று தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், அவ்வழியாக வந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல்…