Polimer News
சிவகங்கையில் ஒரேநாளில் இரு ரவுடிகள் வெட்டிக் கொலை..!
சிவகங்கை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரு ரவுடிகளை மர்ம கும்பல் தீபாவளி நாளில் படுகொலை செய்த சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த 25 வயதான நவீன் என்ற ரவுடி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கல்லல் அருகே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல் மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தை சேர்ந்த ரவுடியான விக்னேஷ் என்ற நபர் தனது நண்பரான முனீஸ்வரன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் விக்னேஷை வெட்டிக் கொலை செய்து விட்டு…