Nakkheeran
’உணவகத்தில் புகுந்த அரசுப் பேருந்து’; கண்ணிமைக்கும் நேரத்தில் கோர சம்பவம்!
அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த உணவகத்தில் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்பட்டி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஒரு உணவகத்தில் புகுந்தது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கிருஷ்ணன் (60) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.