IBC Tamil
தட்டம்மை பரவல் : கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்
நாட்டிலுள்ள 3 சிறைச்சாலைகளின் எந்தவொரு கைதியும் இன்றைய தினம் (9) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தொற்று பரவல் காரணமாக கைதிகளை முன்னிலைப்படுத்தப்பட முடியாது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு அற...