Indian Express Tamil
தீபாவளி நாளில் 11 கொலைகள்: போலீசுக்கே பாதுகாப்பு இல்லை; தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
தீபாவளிப் பண்டிகை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் சிறுவர்கள் உட்பட 11 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறி த.வெ.க அரசு மீது தி.மு.க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு இடையே ஒரே நாளில் 11 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் தமி…