உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நூல்கள் பரிந்துரை செய்த குழுவில் நானும் இருந்தேன்; நடந்தது இதுதான்: எழுத்தாளர் தமிழ்ச் செல்வன்

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் பரிந்துரை செய்த குழுவில் தான் இருந்ததாகவும், 500க்கு மேற்பட்ட நூல்களின் பட்டியலை பரிந்துரை செய்ததாகவும் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ மையத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி எழுதியிருந்தார். இதையடுத்து, தரம் குறைந்த புத்தகங்கள் வாங்கியது மட்டுமன்றி, நூல்களின் ஆசிரியர்கள் பெயர்களில் போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்பில் அதிக விலைக்குப் புத்தகங்கள் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த…